February 21, 2018
tamilsamayam.com
பாரா பளூதூக்கும் உலகக் கோப்பையில் 45 கிலோ வரையிலான பளூதூக்கும் போட்டியில் இந்தியாவின் சகீனா கடூன் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
துபாயில் பாரா பளூதூக்கும் உலகக் கோப்பை போட்டி நடந்து வருகிறது. இதில், 45 கிலோ வரையிலான எடைப்பிரிவில் இந்தியாவின் சகீனா கடூன் கலந்து கொண்டார். 45 கிலோவிற்காக இந்தப் பளூதூக்கும் போட்டியில் 80 கிலோ வரையில், பளூதூக்கி வெள்ளிப்பதக்கம் கைப்பற்றி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இதைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட்டில் காமன்வெல்த் போட்டி தொடங்கயிருக்கிறது. காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் நடந்த கூட்டத்தின் போது, வரயிருக்கும் காமன்வெல்த் போட்டியில் இடம் பெறும் வீரர், வீரர்களின் பட்டியலில் சகீனாவின் பெயர் இடம்பெறவில்லை. இதையடுத்து, கடந்த மாதம் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இந்த நிலையில், தன்னை இந்தியா சார்பில் பங்கேற்க அனுமதிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
28 வயதான சகீனா கிளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் போட்டியில், லைட்வெயிட் எடைப்பிரிவில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 4ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடக்கும் போட்டியில் தன்னை அனுமதிக்க கோரும் படி கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.