February 21, 2018
தண்டோரா குழு
கடந்த 2010ம் ஆண்டு கௌதம் மேனனின் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளிவந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.இதுமட்டுமின்றி சிம்புவின் திரை பயணத்தில் இப்படம் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவுள்ளதாக இயக்குநர் கௌதம் மேனன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தொடர்ச்சியாகவே இப்படம் இருக்குமாம், அதாவது கார்த்திக் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது தான் படத்தின் கதையாம்.
ஆனால், இப்படத்தில் சிம்பு நடிக்கமாட்டேன் என கூறிவிட்டாராம். இதனால் அவருக்கு பதில் நடிகர் மாதவன் நாயகனாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். இதுமட்டுமின்றி கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், மலையாள நடிகர் தாமஸ் டோவினோ ஆகியோரும் இப்படத்தில் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.