February 22, 2018
தண்டோரா குழு
துருவங்கள் 16 படத்தின் வெற்றி மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். அப்படம் ரசிகர்கள் மட்டுமல்லாது பல பிரபலங்கள் மத்தியிலும் பாராட்டைப் பெற்றது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்குநர் கெளதம் மேனனின் ஒன்றாக பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நரகாசுரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். அர்விந்த் சாமி, ஸ்ரேயா,சுந்தீப் கிஷன், ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்து விரைவில் திரைக்குவரவுள்ளது.
இந்நிலையில், தனது மூன்றாவது படமாக நாடக மேடை படத்தை இயக்கவுள்ளதாக கூறியிருந்தார்.இன்றைய நவீன சமூகத்தில் இளைஞர்களின் கண்ணோட்டம் எப்படி உள்ளது என்பதை பற்றிய படமான இப்படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் நடிகர் ஜெயராமின் மகனான காளிதாஸ் ஜெயராமன் நடிக்கின்றனர். மேலும் நடிகர் பார்த்திபன் மற்றும் ரகுமான் முக்கிய வேடங்களில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.