February 23, 2018 awesomecuisine.com
தேவையான பொருட்கள்
கம்பு – ஒரு கப்
உப்பு – தேவைகேற்ப
நெய் – ஒரு தேகரண்டி
ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்
சர்க்கரை – தேவைகேற்ப
தேங்காய் துருவல் – கால் கப்
முந்திரி – ஒரு டீஸ்பூன்
திராட்சை – ஒரு டீஸ்பூன்
பிஸ்தா – ஒரு டீஸ்பூன்
செய்முறை:
கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை, பிஸ்தா போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும்.ஒரு கிண்ணத்தில் கம்பு மாவு, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
பிறகு, அதில் தண்ணீர் தெளித்து உதிரி உதிரியாக பிசைந்து கொள்ளவும்.பிறகு, இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் ஆவி கட்டவும். பின், எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு உதிர்த்து கொள்ளவும்.
பிறகு, அதில் ஏலக்காய் தூள், நெய் சிறிதளவு, தேங்காய் துருவல், சர்க்கரை, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பிஸ்தா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.