February 23, 2018
தண்டோரா குழு
பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தினை நாக் அஸ்வின் இயக்கி வருகிறார்.
சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். பத்திரிகை நிருபராக சமந்தா நடிக்கிறார். திரையில் சாவித்திரியின் வாழ்க்கையை அவர் விவரித்துச் சொல்வது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,இப்படத்தில் அனுஷ்கா முக்கிய வேடமான மறைந்த பழம்பெரும் நடிகை பானுமதி கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். மேலும், ஜெமினி கணேசன் கேரக்டரில் துல்கர் சல்மான், நாகேஸ்வரராவ் வேடத்தில் அர்ஜுன் ரெட்டி, ஹீரோ விஜய் தேவரகொண்டா, எஸ்.வி.ரங்காராவ் கேரக்டரில் மோகன்பாபு நடிக்கின்றனர் ன்பது குறிப்பிடத்தக்கது.