February 23, 2018
தண்டோரா குழு
தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவர் தினேஷ். எல்லா முன்னணி கதாநாயகர்களுக்கும் மிகப் பிடித்தமான நடன இயக்குநர். தேசிய விருது உட்பட பல விருதுகளைக் குவித்தவர். தினேஷ் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகாகும் படம் ஒரு குப்பைக் கதை.
தன் உதவி இயக்குநர் காளி ரங்கசாமியை இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகமாக்கியுள்ளார் பாகன் படத்தை இயக்கிய அஸ்லம். அவருக்காக தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.இந்த படத்தைப் பார்த்ததும் தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அவருடைய ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் படத்தை வெளியிட உள்ளார்.
இப்படத்தில் தினேஷ் ஜோடியாக மனீஷா யாதவ் நடித்துள்ளார்.சுஜோ மேத்யூ, கிரண் ஆர்யன் என்ற இரு புதுமுகங்களும் இப்படத்தில் அறிமுகமாகிறார்கள்.யோகி பாபு, ஜார்ஜ் படத்தின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஆதிரா அம்மாவாக நடித்துள்ளார்.
விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் ப்ரேக் அப் பாடல்காதலர் தினத்தன்று உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். இந்நிலையில், இரண்டாவது பாடலான வா மாச்சான் வா பாடலைநடிகர் சிவகார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ளார்.