July 22, 2016 வெங்கி சதீஷ்
தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறும்போது,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையைப் பொறுத்த வரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்து வரையில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 2 செ.மீ மழையும், பொள்ளாச்சி, சின்னகல்லார், வனமேல்குடி, ஆரணி மற்றும் செங்கல்பட்து ஆகிய இடத்தில் 1 செ.மீ மழையும் பெய்துள்ளது.
கோவையில் வெயிலின் அளவு அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியசும், குறைந்த பட்சம் 21 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளது.