February 24, 2018
tamilsamayam.com
அஃப்ரிடி அபாரமாக கேட்ச் பிடித்து, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பாகிஸ்தான் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கராச்சி கிங்ஸ் மற்றும் குவட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது.
13வது ஓவரில் குவட்டா அணியின் உமர் அமின் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அவர் முகமது இர்பான் வீசிய பந்தை, சிக்சர் லைனுக்கு விரட்டி அடித்தார். எல்லைக்கோடு அருகே அஃப்ரிடி நின்று கொண்டிருந்தார்.
அவர் பந்தை எல்லைக்கோட்டை தாண்டாமல் தடுத்து, தூக்கி போட்டு வெளியேறி பின் உள்ளே வந்து கேட்ச் பிடித்தார். இது அனைவரையும் கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து அஃப்ரிடிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரராக திகழும் அஃப்ரிடி, 398 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8,064 ரன்களும், 395 விக்கெட்களையும் எடுத்துள்ளார்.