February 26, 2018
தண்டோரா குழு
தமிழக வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பதினோறாவது ஐ.பி.எல். தொடர் ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்கி, மே மாதம் 31ஆம் தேதி நிறைவடைகிறது. இதற்கான ஏலத்தில் சென்னை வீரர் அஸ்வினை பஞ்சாப் அணி 7 கோடிக்கு எடுத்துக் கொண்டது.
இந்த நிலையில் நடக்கவிருக்கும் ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற தொடரின் போது ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்தார்.
முதல்முறையாக ஐ.பி.எல். தொடரில் தமிழக வீரர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.