March 1, 2018
tamilsamayam.com
முன்னாள் இந்திய கேப்டன் தோனியில் ஹெல்மெட்டில் மூவர்ண கொடி இல்லாத காரணம் குறித்து ரசிகர் ஒருவர் சுவாரஸ்யமான தகவலை அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின், தனது ஹெல்மெட்டில் இந்திய மூவர்ண கொடியை ஒட்டி முதல் முதலில் பயன்படுத்தினார். அதன் பின் அவரை ரோல்மாடலாக கொண்டு விளையாடும் தற்போதைய கேப்டன் விராட் கோலி உள்ளிட்டபலர் ஹெல்மெட்டில் இந்திய கொடியை பயன்படுத்தி வருகின்றனர்.
தேசப்பற்று தோனி:
ஆனால் இந்திய தேசத்தின் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ள முன்னாள் கேப்டன் தோனி, தனது ஹெல்மெட்டில் தேசிய கொடியை பயன்படுத்துவது இல்லை. இதற்கான காரணத்தை ரசிகர் ஒருவர் இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.
கீப்பர் கஷ்டம்:
அதில்,’ தோனி விக்கெட் கீப்பர் என்பதால், அடிக்கடி ஹெல்மெட் மற்றும் தொப்பியை மாற்றி மாற்றி பயன்படுத்த வேண்டும். அப்போது ஹெல்மெட்டை அடிஅடிக்கடி டிரசிங் ரூமுக்கு கொண்டு செல்ல முடியாது. அதனால் ஹெல்மெட்டை தரையில் வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இந்திய மூவர்ண கொடி இடம் பெற்ற பொருளை தரையில் வைப்பது, தேசிய கொடியை அவமதிக்கும் செயல் என்பதால், தோனி தனது ஹெல்மெட்டில் பிசிசிஐ.,யின் லோகோவை மட்டும் பயன்படுத்துகிறார்,என குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த விஷயம் குறித்து தோனி தரப்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
சர்ச்சை வரலாறு:
தோனி தலைமையில் இந்திய அணி விளையாடிய போது, மைதானத்தில் ஹெம்மெட்டை பயன்படுத்த போது எச்சில் துப்பும் இடங்களில் தேசிய கொடி இடம் பெற்ற ஹெல்மெட்டை வீரர்கள் வைக்கிறார்கள். அதனால், ஹெல்மெட்டில் மூவர்ண கொடியை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என ஒருவர் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அப்போதும் தோனி, தனது ஹெல்மெட்டில் தேசிய கொடியை பயன்படுத்தவில்லை.