March 2, 2018 tamil.boldsky.com
தேவையான பொருட்கள்:
பாதாம் – 200 கிராம்
சர்க்கரை – 50 கிராம்
ஏலக்காய் – 4 (பொடி செய்து கொள்ளவும்)
நெய் – 100 கிராம்
பாதாம் – சிறிது (நறுக்கியது)
செய்முறை:
முதலில் பாதாமை நீரில் போட்டு 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின்னர் அதன் தோலை நீக்கிவிட்டு, அதனை லேசாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்த பாதாம் சேர்த்து 6-7 நிமிடம் வறுக்க வேண்டும்.
பின் அதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி, பின் இறக்கி குளிர வைக்க வேண்டும். கலவையானது வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போது, அதனை சிறு உருண்டைகளாக பிடித்து, அதன் மேல் சிறிது நறுக்கிய பாதாமை வைத்து அலங்கரித்தால், பாதாம் லட்டு ரெடி!!!