March 4, 2018
kalakkalcinema.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது காலா மற்றும் 2.O படங்கள் ரிலீசுக்கு வர தயாராக உள்ளன. சமீபத்தில் தான் காலா படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
ஆனாலும் டீஸர் வெளியாவதற்கு முன்னரே இணையத்தில் லீக்காகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது, தற்போது அதே நிலை 2.O படத்திற்கும் ஏற்பட்டுள்ளது.
ஆம், ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள 2.O படத்தின் டீஸர் தற்போது இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகின்றன. இதில் படக்குழுவினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.