• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாலியல் பலாத்கார முயற்சியை தடுத்த வாலிபரின் கழுத்தை நெரித்த சம்பவம்

July 23, 2016 தண்டோரா குழு

கபாலி படம் வெளியான அன்று தமிழகம் எங்கும் கபாலி சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்த வேளையில், சென்னை ஆலந்தூர் பகுதியில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததைப் பார்த்து உதவி செய்யச் சென்றவரின் கழுத்தை கயிற்றால் நெரித்துக் கொல்ல முயற்சித்த சம்பவம் தற்போது பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு கபாலி படத்தைப் பார்த்து விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார் வசந்த் பால். அப்போது ஒரு பெண்ணை மூன்று பேர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்வதை பார்த்த அவர் அதைத் தடுத்து நிறுத்தினார்.

இந்தச் சம்பவத்தில் தனக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து பாதிக்கப்பட்ட வசந்த் பால் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில், 'கடந்த வெள்ளிக்கிழமை இரவு கபாலி படம் பார்த்துவிட்டு, தி.நகரில் உள்ள நண்பர்களைச் சந்தித்து பின்னர் இரவில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தேன்.

அப்போது, ஆலந்தூர் பாலம் அருகே செல்லும்போது புகை பிடிப்பதற்காக அங்கு நின்றேன். அப்போது ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. என்னவென்று சற்று அங்குப் போய் பார்த்தேன். அங்கு போதையில் இருந்த ஒரு பெண்ணை மூன்று பேர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து அந்தப் பெண்ணுக்கு உதவுவதற்குச் சென்றேன். அப்போது அவர்கள் மூன்று பேரும் என்னுடைய கழுத்தை சணல் கயிற்றால் நெறுக்கினர். இதையடுத்து பெண் அலறிய சத்தம் கேட்டு அந்த வழியே சென்ற ஆட்டோக்காரர் ஒருவர் ஓடி வந்தார்.

உடனே அவர்கள் மூன்று பேரும் அந்த இடத்தில் இருந்து என்னை விட்டு விட்டுத் தப்பி ஓடிவிட்டனர்.

அந்தப் பெண் கேட்டுக் கொண்டதால் போலீசில் புகார் அளிக்கவில்லை. எனினும், இரவு ரோந்தில் போலீசார் இருப்பார்கள் அவர்களிடம் இது குறித்து கூறலாம் என்று சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக அங்குத் தேடினேன் யாரும் அங்கு இல்லை.

போலீசில் முறையாகப் புகார் கொடுக்காவிட்டாலும், போலீசாரிடம் இந்தத் தகவலைக் கூறலாம் என்று பார்த்தால் யாரும் இல்லை. சென்னை பாதுகாப்பற்ற நகரமாகச் சென்று கொண்டு இருக்கிறது என்று தனது ஆதங்கத்தைச் சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும், தவறு நடக்கும்போது அதைத் தடுக்க பயப்பட வேண்டியதில்லை அது சரியாக இருந்தால் உலகமே உங்கள் பின்னால் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வசந்த் பால் ஒரு புகைப்பட கலைஞர் என்பதால் தனது கழுத்தைக் கயிற்றால் நெரித்த புகைப்படத்தையும் சமூகவலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க