July 24, 2016 தண்டோரா குழு
ஒரு சில தினங்களுக்கு முன்பு பாரதீய ஜனதாக் கட்சி தலைவர் தயாசங்கர் சிங்க், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவாதியை தரக்குறைவாக விமரிசித்ததை எதிர்த்து, சண்டிகாரின் BSP தலைவர் ஜன்னட் ஜஹன், சிங்கின் நாக்கைத் துண்டிப்போருக்கு 50 லட்சம் பரிசு என்று அறிவித்தார்.
தேர்தலில் போட்டியிட அனுமதிச் சீட்டு வழங்கும்போது முதலில் ஒரு கோடியில் தொடங்கும் தொகை, மாலைக்குள் 2 அல்லது 3 கோடிக்குக் கூட மாயாவதியால் விற்கப்படும். இது விபசாரத்திற்குச் சமம் என்றும், மாயாவதின் குருவான கன்ஷிராமின் கனவுகளை இவர் தூள் தூளாக்குகிறார் என்றும் விமரிசித்தார்.
இதையடுத்து நூற்றுக்கணக்கான BSP தொண்டர்கள் ஹஸ்ரட்கஞ்ச்ல் சாலைமறியல் போன்ற போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டக் காவலர்கள் பெரும் பிரயாசை எடுக்கவேண்டியிருந்தது.
அதன் எதிரொலியாக பாரதீய ஜனதா கட்சி, உத்திரப் பிரதேசத் துணைத் தலைவரான தயாசங்கர் சிங்க்ஐ கட்சியை விட்டு ஒதுக்கி வைத்தது.
எனினும் கோபம் குறையாத ஜன்னட் ஜஹன் இவ்வறிப்பை வெளியிட்டுள்ளார். பாரதீய ஜனதாக் கட்சியின், தலித்து எதிர்ப்பு மனப்பான்மையை இது காட்டுகின்றது என்று மாநில BSP தலைவர் ராஜ் அசல் ரஜ்பேர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.