March 7, 2018
தண்டோரா குழு
கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் 7 கோடி ரூபாயாக உயர்த்தி பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள பட்டியலை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. வீரர்களின் ஊதியம் ஏ, பி, சி என்ற மூன்று நிலைகளில் பிரிக்கப்படுகிறது. வீரர்களின் செயல்பாடு, அனுபவம் ஆகியவற்றை வைத்து வீரர்களுக்கு வீரர் சம்பளம் வேறுபடும்.
அந்த வகையில், கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் 7 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 2-வது பிரிவில் உள்ள வீரர்களுக்கு, ஆண்டுக்கு ரூ.5 கோடி சம்பளம் அளிக்கப்படும் என்றும், 3-வது பிரிவில் உள்ள வீரர்களுக்கு ரூ.3 கோடி சம்பளம் அளிக்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் குறைந்தபட்ச சம்பளம் ஒரு கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.