March 9, 2018
தண்டோரா குழு
பிரபல கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீது அவர் மனைவி அளித்த புகாரின் பேரின் கொல்கத்தா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்திய கிரிகெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் தன்னை பலமுறை அவமானப்படுத்தி இருப்பதாகவும் கொல்ல முயன்றதாகவும் கூறி மீது அவரது மனைவி புகார் கூறினார். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஷமி மறுத்துள்ளார். மனைவிக்கு மனநலம் சரியில்லை என்றுள்ளார்.
இதற்கிடையில் ஷமி குறித்து அவரது மனைவி கொல்கத்தா குற்ற பிரிவு ஜாயிண்ட் கமிஷ்னர் பிரவின் திரிப்பாதியிடம் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், தற்போது ஷமியின் மீது பிரிவு 307 கொலை முயற்சி) 498 எ (மனைவியை கொடுமைப்படுத்துதல்), 506 (கிரிமினல் குற்றம்), 328 (விஷம் கொடுத்து, தாக்குதல்), 34 (பலருடன் சேர்ந்து கொலை முயற்சி செய்தல்), 376 (வன்புணர்வு) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.