• Download mobile app
21 Sep 2024, SaturdayEdition - 3146
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரயில் டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு பெயருக்கு மாற்றலாம்!

March 10, 2018 தண்டோரா குழு

முன்பதிவு செய்த ரயில் டிக்கட்டை வேறு ஒருவரின் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,

தலைமை முன்பதிவு கண்காணிப்பாளர்களுக்கு பெயரை மாற்றித் தரும் அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்தவர் பெயரை மாற்றுவதற்கான வழிமுறைகளும் நிபந்தனைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அரசு ஊழியராக இருந்தால் பணியின் காரணமாக செல்லும் போது, 24 மணி நேரம் முன்பாக எழுத்துப்பூர்வமாக விண்ணப்பித்து பெயரை மாற்றிக் கொள்ளலாம்.

அதைப்போல் பயணிகளும் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பாக தமது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தனது பெயரில் பதிவு செய்த ரயில் டிக்கட்டை மாற்றிக் கொள்ள கோரிக்கை விடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  மாணவர்கள் பெயரில் பள்ளி, கல்லூரி நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட டிக்கட்டுகளையும் வேறு மாணவர்கள் பெயரில் 48 மணி நேரம் முன்பாக மாற்றிக் கொள்ளலாம். கல்யாண கோஷ்டியினருக்கும், தேசிய மாணவர் படையினருக்கும் இந்த வசதி அளிக்கப்படுகிறது.

மேலும் படிக்க