March 12, 2018
tamilsamayam.com
வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் அதிக டி20 போட்டிகளில் தோல்வியடைந்த அணி என்ற மோசமான சாதனையைப் படைத்துள்ளது.
இலங்கை சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக சுதந்திர கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் இலங்கை நடத்துகின்றது. இதில் இலங்கை, இந்தியா, வங்கதேசம் அணிகள் பங்கேற்றுள்ளது.
நேற்று நடந்த 3வது போட்டியில் இலங்கை – வங்கதேசம் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 214 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய வங்கதேசம் அணிக்கு முஷ்பிகுர் ரஹிம் 35 பந்தில் 72 ரன்கள் குவிக்க வங்கதேச அணி அசத்தலாக வெற்றி பெற்றது.