March 15, 2018
தண்டோரா குழு
புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வட சென்னை பின்னணியில் தாதா மற்றும் போலீஸுக்கு இடையே ஏற்படும் மோதலை மையமாகக் கொண்டு வெளியான படம் ‘விக்ரம் வேதா’.
இப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடிகர் மாதவனும், வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும்நடித்திருந்தனர். இப்படம் வசூல் ரீதியிலும் விமர்சன ரீதியிலும் மாபெரும் வரவேற்ப்பை பெற்றது. தற்போது, இப்படத்தை புஷ்கர் காயத்ரி ஹிந்தியில் இயக்கவுள்ளனர். இப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம், ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளது.
மேலும், பாலிவுட் ரசிகர்களுக்கு ஏற்ப இந்த படம் ஹிந்தியில் உருவாகவுள்ளதாம். தமிழில் மாதவன் நடித்த கதாபாத்திரத்தில் ஹிந்தியிலும் அவரே நடிக்கவுள்ளார். விஜய் சேதுபதி கதாபாத்திரத்துக்கு நடிகரை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.