March 16, 2018
tamilsamayam.com
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு எதிராக அவரது மனைவி அளித்த புகாரால் மிகவும் சோர்ந்து போய் உள்ள ஷமிக்கு ஆறுதல் அளிக்கும் வண்ணம் தல தோனி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிகெட் வீரர் முகமது ஷமி பல பெண்களுடன் தொடர்பில் உள்ளார், என்னை கொடுமைப் படுத்துகிறார், மேக்ஸ் பிக்ஸிங்கில் ஈடுபட்டார், தன்னை கொலை முயற்சி செய்தார் என பல அடுக்கடுக்கான புகாரை கணவர் மீது சுமத்தியுள்ளார் அவரது மனைவி ஹாசின் ஜஹான். இதனால் அவர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளார். தன் மனைவியை நன்கு விசாரித்தால் நான் குற்றமற்றவன் என தெரியும் என தெரிவித்துள்ளார்.
தோனி ஆதரவு :
கிரிக்கெட் வீரர்கள் யாரும் ஷமிக்கு ஆதரவாக யாரும் இல்லாத நிலையில் தோனி ஷமிக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளார்.தோனி கூறுகையில், “எனக்கு தெரிந்தவரை ஷமி மிகவும் பண்பானவர். அவர் மனைவி மற்றும் நாட்டை ஏமாற்றி இருக்க மாட்டார். இது அவரது குடும்ப விஷயம். இதற்கு மேல் நான் எதுவும் கூறக்கூடாது.” என்றார்.