March 17, 2018
தண்டோரா குழு
‘சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன்’ ஓகே,ஒகே போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் எம்.ராஜேஷ். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’.
இதனையடுத்து ராஜேஷ் இயக்கும் புதிய படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், இயக்குநர் எம்.ராஜேஷ் மற்றுமொரு புதிய படத்தை இயக்க கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளாராம். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குநர் எம்.ராஜேஷ் ஏற்கெனவே, சிவகார்த்திகேயனின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்கு வசனம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.