March 17, 2018
தண்டோரா குழு
உலக புகழ் பெற்ற புகைப்பட கலைஞரும் புவிட்சர் விருது பெற்றவருமான நிக் வுட் இன்று கேரளாவிற்கு வந்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வியட்நாம் போரின் போது இவர் எடுத்த சடலங்களுக்கு இடையே நிர்வாணமாக அழுதபடி ஓடி வரும் சிறுமியின் புகைபடம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது கேரளா வந்து இவர் இளம் கலைஞர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளார். இதற்கிடையில், நிக் வுட் மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டி, மோகன்லால் ஆகியோரை சந்தித்துள்ளார். அதிலும் மோகன்லாலை ஓடியன் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துள்ளார்.
மம்மூட்டி, மோகன்லால் இருவரும் புகைப்பட கலையில் ஆர்வம் உள்ளவர்கள் என்பதும் நிக்விட் அவர்களுக்கு பிடித்த கலைஞர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.