March 19, 2018
tamilsamayam.com
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் அரையிறுதி வரை முன்னேறிய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பானிய வீராங்கனை அகனே யமகுச்சியிடம் தோல்வியடைந்தார்.
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் பழமையான பேட்மிண்டன் தொடர்களில் ஒன்றான ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனை பிவி சிந்து ஒன்றையர் பிரிவு அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.
சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஜப்பானிய வீராங்கனை அகனே யமகுச்சியை எதிர்த்துக் களமிறங்கினார். முதல் செட்டை 21-19 என சிந்து கைப்பற்றினார். அடுத்த செட்டில் எழுச்சி பெற்ற யமகுச்சி 21-19 என இரண்டாவது செட்டை தனதாக்கினார்.
மூன்றாவது செட்டில் இருவரும் சரிமாரியாக போட்டியிட்ட நிலையில் யமகுச்சி 21-18 என சிந்துவை வீழ்த்தினார். இதன் மூலம் 19-21, 21-18, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். தோல்வியைத் தழுவிய சிந்து தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.