• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எள்ளு வெல்ல லட்டு

March 20, 2018 tamil.boldsky.com

தேவையான பொருட்கள்:

வெள்ளை எள்ளு – 1 கப்

வெல்லம் – 1 கப்

நெய் – 3 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் – 2 (பொடி செய்தது)

தண்ணீர் – 1/2 கப்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எள்ளை போட்டு தீயை குறைவில் வைத்து, பொன்னிறமாக வறுத்து, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வெல்லத்தைப் போட்டு, வெல்லப் பாகுவை ரெடி செய்ய வேண்ம். பாகு நன்கு கெட்டியாகும் போது, அதில் வறுத்து வைத்துள்ள எள்ளு, ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி, நெய்யை சேர்த்து கிளறி, இறக்கி வைக்க வேண்டும்.

இறுதியில் கலவையானது ஓரளவு சூடாக இருக்கும் போதே, அதனை லட்டுகளாக பிடிக்க வேண்டும். குறிப்பாக லட்டு பிடிக்கும் போது, கையில் லேசாக தண்ணீரால் நனைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனை காற்றுப் புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்தால், லட்டானது 10-15 நாட்கள் நன்றாக இருக்கும்.

மேலும் படிக்க