March 21, 2018
tamilsamayam.com
சர்வதேச கால்பந்து போட்டிகளை நடத்த ஈராக் மீது இருந்த 30 ஆண்டுகால தடையை, பீபா தற்போது நீக்கியுள்ளது.
ஈராக் நாட்டில் கடந்த 1990 ஆம் ஆண்டு குவைத் படையெடுப்பு நடந்தது. அன்று முதல், ஈராக் நாட்டில் சர்வதேச கால்பந்து போட்டிகளை நடத்த சர்வதேச கால்பந்து சங்கமான ஃபீபா தடை விதித்தது. இதைத் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல், ஐஎஸ் படையெடுப்பு என பல்வேறு ஆயுத யுத்தங்கள் நடந்ததால் ஈராக்கில் கடந்த ஈராக்கில் கடந்த 30 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளே நடக்காமல் இருந்தது.
இந்நிலையில், அந்நாட்டில் அமைதி திரும்பி வருவதால், ஈராக் மீதான தடையை ஃபீபா நீக்கியுள்ளது. இது குறித்து பேட்டியளித்த ஃபீபா தலைவர் ஜியானி இந்பாண்டினோ, “ஈராக்கில் உள்ள அர்பில், பாஸ்ரா மற்றும் கர்பாலா ஆகிய இடங்களின் சர்வதேச போட்டிகளை நடத்த அனுமதிக்கிறோம். இருப்பினும், தலைநகர் பாக்தாத்தில் சர்வதேச போட்டிகளை நடத்துவது பற்றி ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது,” என்று தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பையடுத்து, வரும் மார்ச் 21 ஆம் தேதி பார்காவில் கத்தார், சிரியா நாடுகள் பங்கேற்கும் நட்பு ரீதியான போட்டித் தொடர் நடத்தப்பட உள்ளது. இந்த செய்தியால், அந்நாட்டு அரசும், மக்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.