March 22, 2018
cinepettai.com
நடிகர் அமீர்கான் இந்திய சினிமாவில் பாலிவுட் நடிகர்களில் முன்னணி நடிகராக இருப்பவர் இவரை பாக்ஸ் ஆபிஸ் மன்னன் என்றே சொல்லவேண்டும் இவர் நடித்த தங்கல் படம் 2000 கோடி வசூல் ஆனது மேலும் சீக்ரட் சூப்பர் ஸ்டார் 950 கோடி என வசூல் சேர்த்தது குறுப்பிடத்தக்கது.
இவர் நடித்த பல படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியது ஆம் தூம்-3, 3 இடியட்ஸ் என லிஸ்ட் போய்க்கொண்டே இருக்கும் அந்த அளவு வசூலில் மாஸ் காட்டியது, தற்பொழுது அமீகான் தங்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் என்ற படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் இவருடன் இணைந்து அமிதாப் பச்சனும் நடிக்கிறார்.
மேலும் இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டம் போட்டுள்ளார்கள் இந்த நிலையில் அமீர்கான் இன்னும் 10 வருடத்திற்கு இந்த ஒரு படம் தான் நடிக்க போகிறார், படம்மானது மகாபாரதத்தை அடிப்படையாக வைத்து எடுக்கபோகிறார்களாம், படத்தின் பட்ஜெட் மட்டுமே 1000 கோடி ஒதுக்கியுள்ளார்கள் படத்தை முகேஷ் அம்பானி தயாரிக்க போகிறாராம்.