March 22, 2018
tamilsamayam.com
முதன் முறையாக இந்த ஆண்டின் 11வது ஐபிஎல் சீசனில் டிஆர்.எஸ் முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.
ஐபிஎல் 11வது சீசன் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 7ம் தேதி தொடங்க உள்ளன. இதற்கான வீரர்கள் ஏலம் நடந்து முடிந்து போட்டிக்காக தயாராகி வருகின்றனர். இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடக்கும் 11வது ஐபிஎல் போட்டி மே மாதம் 27ம் தேதி நடக்கிறது. இதில், 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த நிலையில், முதன் முறையாக இந்த ஆண்டில் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா கூறுகையில்,
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யும் டி.ஆர்.எஸ் முறை முதன் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன்படி, சர்வதேச டி20 போட்டியில் இருப்பது போன்று ஒவ்வொரு அணியும் ஒரு முறை நடுவரின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யலாம். அது சரியான அப்பீலாக இருந்தால், தொடர்ந்து அப்பீல் செய்ய முடியும் என்று கூறினார். மேலும், இந்த தொடரில் பேட்டிங்கில் அதிக ஸ்டிரைக் ரேட் வைக்கும் வீரருக்கு கார் பரிசாக அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.