March 23, 2018
தண்டோரா குழு
இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளரான ஹர்பஜன் சிங் பவுலிங்கில் பல்வேறு சாதனைகளை புரிந்தவர். இந்தாண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் சென்னை அணிக்காக விளையாட உள்ளார்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கும் ஹர்பஜன் சிங் தமிழில் டுவிட் செய்துள்ளார்.
“நான் வந்துட்டேன்னு சொல்லு
தமிழின் அன்பு உடம்பெறப்பெல்லாம் எப்புடி இருக்கீக மக்கா.
உங்க வீட்டுப்புள்ள சேப்பாக்கத்துல, மஞ்ச ஜெர்சில, “வீரமா”, காதுகிழியிற உங்க விசிலுக்கு நடுவுல சென்னைக்காக விளாட(ச) போறத நெனச்சாலே “மெர்சலாகுது” தாய் உள்ளம் கொண்ட அன்பு தமிழ்நாடு வாழ்க!!!!” என்று பதிவிட்டுள்ளார்.