March 24, 2018
cineulagam.com
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தளபதி 62. சாமி 2, சண்டக்கோழி 2 என பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்திலும் அவர் தான் நடிக்கிறார். அந்த படத்தின் ஷூட்டிங் நேற்று தான் முடிவடைந்தது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
கீர்த்தி சுரேஷ் ஒய்.எஸ்.ஆரின் மருமகளாக நடிக்கவுள்ளார் – அதாவது ஜகன் மோகன் ரெட்டியின் மனைவியான ஒய்.எஸ்.பாரதி வேடத்தில் தான் அவர் நடிக்கவுள்ளார்.
யாத்ரா என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ராஜசேகர ரெட்டியாக மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டி நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.