March 24, 2018
tamilsamyam.com
காமன்வெல்த விளையாட்டு போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா குறித்து தகவல்களை பார்க்கலாம்.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில்,காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்,வரும் ஏப்ரல் 4 முதல் 15 வரை நடக்கவுள்ளது. இதன் ஆண்கள் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்கவுள்ளார்.
நீரஜ் சோப்ராவின் திறமை தலைமுறையில் ஒருவருக்கு மட்டும் உள்ள அதிசய திறமையாக கருதப்படுகிறது.இம்மாதத்தில் நடந்த தகுதிச்சுற்று போட்டியின் மூலமாக நீரஜ் அதிகாரப்பூர்வமாக காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றார்.
தொடர்ந்து 85 மீட்டர் தூரத்துக்கு மேல் எறிந்து, ஆஸ்திரேலிய காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வெல்வதே தனது இலக்கு என நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.