• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவின் கனவு நாயகனுக்கு முதலாமாண்டு நினைவஞ்சலி

July 27, 2016 வெங்கி சதீஷ்

இந்தியா உலகரங்கில் தலைநிமிர்ந்து இருக்கக் காரணமானவர்களில் முக்கியமானவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள். அவர் ஜனாதிபதிக்கு முன்பு வகித்த பதவியான தலைமை விஞ்ஞானி என்ற பதவியை வைத்து அவர் இந்தியாவிற்குச் செய்தது மிகப்பெரிய சாதனை.

அதுமட்டுமின்றி தன்னுடைய வாழ்நாளில் பெரும் பகுதியை மாணவ மாணவிகளுக்காகவே செலவழித்த சிறந்த ஆசிரியரும் இவர்தான். இவரை ரோல் மாடலாக வைத்து இன்றும் பல மாணவ மாணவிகள் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

இவரது மரணம் கூட இவர் விரும்பியது போலவே மாணவர்களுடன் உரையாடிக்கொண்டு இருக்கும்போதே நடைபெற்றது. ஆச்சரியமான விஷயம் இல்லை. அங்குச் செல்வதற்கு முன் வாகனத்தில் செல்லும்போது அவரது பாதுகாப்பிற்கு வந்த ஒரு வீரர் வாகனத்தின் வெளியே நின்றுகொண்டு வந்துள்ளார். அதைப் பார்த்த கலாம், அவரை உள்ளே வந்து அமரச் செல்லியுள்ளார்.

ஆனால் பாதுகாப்பு கருதி அவர் ஒருமணிநேரம் வெளியே நின்றுகொண்டு வந்துள்ளார். பின்னர் அவரை அளித்த கலாம், நன்றி தெரிவித்ததோடு, சிறந்த உபசரிப்பையும் கொடுத்துள்ளார். பின்னர் எனக்காக ஒருமணிநேரம் நின்றுகொண்டு வந்ததற்கு நன்றி கூறியபோது, அந்த வீரர் உங்களைப் போல ஒருவரைக் காப்பாற்ற நான் எத்தனை மணிநேரம் வேண்டுமானாலும் நின்றுகொண்டு வருவேன் எனத் தெரிவித்துள்ளார்.

apj3

இது போன்ற மனிதம் அவரிடம் இருந்ததாலேயே அவர் இன்றும் பலரது இதயங்களில் வாழ்ந்து வருகிறார். அவரது முதலாமாண்டு நினைவுநாளான இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட பேக்கரும்பு என்ற இடத்தில் அவரது உருவச்சிலை திறந்துவைக்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் மனோகர் பரிக்கர், வெங்கைய நாயுடு, பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநில அமைச்சர்கள் மணிகண்டன், நிலோபர் கபில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய மனோகர் பரிக்கர், இந்தாண்டு அடிக்கல் நாட்டப்பட இடத்தில் அடுத்த ஆண்டுக்குள் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டுவிடும் எனத் தெரிவித்தார். பின்னர் பேசிய வெங்கைய நாயுடு, இனிமையான தமிழில் பேச முடியாமல் போனது மனவருத்தத்தைக் கொடுப்பதாகவும், கலாமின் நினைவிடம் கட்ட கூடுதல் இடம் ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு நன்றி எனவும் தெரிவித்தார்.

பின்னர் பேசிய அமைச்சர் நிலோபர் கபில், அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதி ஆவதற்கு முழு ஆதரவையும் வழங்கியவர் முதல்வர் ஜெயலலிதாதான் எனத் தெரிவித்தார்.

apj2

இந்நிகழ்ச்சியில் கலாமின் மூத்த சகோதரர் மீரா முத்து மரைக்காயர் உள்ளிட்ட உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதனிடையே அப்துல் கலாம் நினைவிடத்தில் நூறு கலாம் முகங்கள் இருக்குமாறு மணல் சிற்பம் செய்த கலைஞரை அமைச்சர்கள் பாராட்டினர்.

மேலும் படிக்க