March 27, 2018
தண்டோரா குழு
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு பிறகு அதில் பங்கேற்ற பலர் பிரபலமாகியுள்ளனர். அந்த வகையில் கவிஞர் சினேகன் மற்றும் நடிகை ஓவியா இருவருக்குமே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இதற்கிடையில் யமுனா’ என்ற படத்தை இயக்கிய இ.வி.கணேஷ் பாபுவின் புதிய படம் ‘பணங்காட்டு நரி’. இதில் ‘பிக் பாஸ்’ புகழ் சினேகன் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெறுகிறது. இந்நிலையில், இப்படத்தில் சினேகனுக்கு ஜோடியாக நடிக்க ‘பிக் பாஸ்’ புகழ் ஓவியாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகை ஓவியா மலேசியாவில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.