• Download mobile app
20 Apr 2025, SundayEdition - 3357
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இனி யாரையும் இப்படி ஏமாற்றாதீர்கள்” – பிரபல இயக்குனருக்கு கார்த்திக் நரேன் வேண்டுகோள்

March 28, 2018 தண்டோரா குழு

துருவங்கள் 16 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் கார்த்திக் நரேன். அப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து,  வெற்றி இயக்குநர்களுள் ஒருவராக கார்த்திக்  நரேன் கருதப்பட்டார்.

இவர் தற்போது இயக்குனர் கௌதம் மேனன் தயாரிப்பில், அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷண், ஆத்மிகா ஆகியோர் நடிப்பில் ‘நரகாசுரன்’ படத்தினை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் கௌதம் மேனன் அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில், இளம் இயக்குனர்களுள் சிலர் புலம்பி கொண்டிருக்கும் வேளையில், மற்ற சிலர் தங்களது திறமைகளை வெளிக்காட்டி வருகிறார்கள் எனக் கூறி  ஒரு வீடியோ பதிவினை பாராட்டி பேசியிருந்தார்.

இதற்கு கார்த்திக் நரேன் தனது ட்விட்டரில்,

“ஒருவர் மீது நம்பிக்கை வைப்பதற்கு முன், ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தியுங்கள்” என்றும், “பலர் என்னிடம் அறிவுரை கூறினாலும் நான் உங்களை நம்பினேன். ஆனால் என்னை நீங்கள் குப்பை போல நடத்தினீர்கள். கடைசியில் நாங்களே முதலீடு செய்ய வேண்டியதாகிவிட்டது. தயவு செய்து இனி யாரையும் இப்படி ஏமாற்றாதீர்கள்” என கார்த்திக் நரேன் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க