March 28, 2018
தண்டோரா குழு
பந்தை சேதப்படுத்திய விவகாரதத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித்&டேவிட் வார்னர் ஆகியோர் ஓராண்டுக்கு ஐ.பி.எல். உட்பட எந்த போட்டிகளிலும் பங்கேற்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.
ஆஸ்திரேலியா,தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய வீரர் பான் கிராப்ட் பந்தை சேதப்படுத்திய விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.இதனையடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் ஆகியோர் த பதவி பறிக்கப்பட்டது. அதைபோல் ஐபிஎலிலும் இருவரின் கேப்டன் பதவி பறிக்கபட்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கபட்டது.
இந்நிலையில், கிரிக்கெட் விளையாட ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஒராண்டும், பான் கிராப்ட்க்கு 9 மாதங்களும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் 2 ஆண்டுகள் கேப்டன் பொறுப்பை வகிக்க முடியாத படியும் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.