March 30, 2018
தண்டோரா குழு
அட்லீ இயக்கத்தில், விஜய்,சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் நடிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான படம் மெர்சல்.இப்படம் வெளியாகும் முன்பே, டீசர், டிரைலர், பாடல்கள், என பல சாதனைகளை படைத்தது.
இந்நிலையில் தற்போது இப்படத்திற்கு பிரிட்டன் தேசிய விருது கிடைத்துள்ளது.பிரிட்டனின் நான்காவது தேசிய திரைப்பட விழா 2018க்கான
விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், சிறந்த வெளிநாட்டுப் படம் பிரிவில், விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்துக்கு சிறந்த படத்துக்கான விருதை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.