March 31, 2018
தண்டோரா குழு
உலகின் நம்பர் 1 இயக்குனரும் இன்சப்ஷன், இன்டர்ஸ்டெல்லர் போன்ற பிரமாண்ட படங்களை இயக்கியவருமான ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் தற்போது தன் குடும்பத்தினருடன் இந்தியா வந்துள்ளார்.
இந்நிலையில் அவரை நேற்று சந்தித்த நடிகர் கமல்ஹாசன் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.ஏனெனில், கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய டன்கிர்க் படத்தை கமல் தியேட்டரில் பார்க்காமல் பிறகு டிஜிட்டலாக பார்த்தாராம் அதற்காகத்தான் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் கமல் நடித்த பாபநாசம் படத்தை நோலன் பார்த்ததாக தெரிவித்தது தனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது என கூறியுள்ளார்.