April 4, 2018
tamilsamayam.com
தல அஜித் மும்பை இந்தியன்ஸ் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் உள்ள மாஸ் ஹீரோக்களில் மிகவும் முக்கியமானவராக கருதப்படுபவர் தல அஜித். சிறுத்தை சிவா இயக்கத்தில் தொடர்ந்து வி வரிசை படங்களில் நடித்து வந்தார். தற்போது விஸ்வாசம் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். இந்த நிலையில், வரும் 7ம் தேதி 11வது ஐபிஎல் சீசன் தொடங்கவுள்ளது. இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இந்த சீசனில் களமிறங்குகின்றன. இந்த நிலையில், தல அஜித் மும்பை இந்தியன்ஸ் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.