April 5, 2018
தண்டோரா குழு
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பொங்கலன்று வெளியான படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா தற்போது, செல்வராகவன் இயக்கும் ‘NGK’ படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,நடிகர் சூர்யா இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஹரி இயக்கத்தில் ஏற்கெனவே, ‘வேல், ஆறு, சிங்கம் 1, 2, 3’ ஆகிய படங்களில் சூர்யா நடித்துள்ளார். இதனால் இப்படம் சிங்கம் 4 தானா என்றும் பலரும் எதிர்பார்த்தனர்.ஆனால், இன்னும் பெயரிடப்படாத இப்படம் ‘சிங்கம்’ பாகங்களின் தொடர்ச்சி இல்லையாம். இது முற்றிலும் வேறு ஒரு கதையாம். இதை ஹரியே பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில் உறுதிபடுத்தியுள்ளார்.