April 6, 2018
tamilsamaym.com
முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து தென் ஆப்ரிக்க வீரர் ரபாடா விலகினார்.
இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுகான தொடர் வரும் 7ம் தேதி துவங்குகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளில் 7 அணிகளுக்கு இந்திய வீரர்கள் கேப்டனாக உள்ளனர். ஐதராபாத் அணிக்கு மட்டும் வில்லியம்சன் கேப்டனாக உள்ளார்.
இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக பங்கேற்கயிருந்த தென் ஆப்ரிக்க வீரர் ரபாடா, பின்புற முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். இந்த காயத்தில் இருந்து ரபாடா முழுமையாக குணமாக மூன்று மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.