April 7, 2018
தண்டோரா குழு
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21வது ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது.இதில் 77 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் தங்கப்பதக்கம் வென்றார்.
இதன் மூலம் இத்தொடரில் இந்தியாவுக்கு 3 தங்கம்,ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களைப் பெற்றிருந்த இந்தியா, பதக்கப்பட்டியலில் 3வது இடத்தை எட்டியுள்ளது.
காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் பெற்றுத் தந்த சதீஷ்குமாருக்கு குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.