April 7, 2018
தண்டோரா குழு
மும்பையில் 11 -வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி, வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கியது.
2018-ம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மும்பை வான்கடே மைதானத்தில் கலைநிகழ்ச்சிகளுடன் துவங்கியது. இதில் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவா, பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் இணைந்து பல்வேறு ஹிட் பாடல்களுக்கு நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். அதைபோல் பாகுபலி நாயகி தமன்னா, பாலிவுட் நடிகர் ஹிர்த்திக் ரோஷன் ஆகியோரும் மைதானத்தில் அடுத்தடுத்து தோன்றி, திரைப்படப் பாடல்களுக்கு நடமாடினர்.
துவக்க விழாவைத் தொடர்ந்து நடக்கும் முதல் லீக் போட்டியில், 2 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்சும், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்சும் மோதுகின்றன.