April 9, 2018
தண்டோரா குழு
தொடை எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல்., தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர், கேதர் ஜாதவ் விலகியுள்ளார்.
10 வது ஐபிஎல் கிரிகெட் மும்பையில் கடந்த 7ம் தேதி துவங்கியது. இதில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் களமிறங்கிய சென்னை அணி மும்பை அணியை வீழ்த்தியது. மும்பை அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியின் போது சென்னை அணி வீரர் ஜாதவிற்கு காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் மும்பை அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியின் போது ஏற்பட்ட காயத்துக்கு ஜாதவ் ஸ்கேன் எடுத்துபார்க்கப்பட்டது. அதில் இரண்டாம் கட்ட காயத்தால் ஜாதவ் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த காயம் குணமாக நீண்ட நாட்கள் ஆகும் என்பதால், இந்த ஆண்டுக்கான ஐபிஎல்., தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் மைக்கேல் ஹசி கூறுகையில்,’சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை இழந்தது மிகப்பெரிய இழப்புதான்.’ எனக் கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேதார் ஜாதவ் ரூ 7.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.