September 18, 2018 awesomecuisine.com
தேவையான பொருட்கள்:
சாமை அரிசி – ஒரு கப் (வேகவைத்தது)
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
கடலை பருப்பு – ஒரு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கியது)
சிகப்பு குடைமிளகாய் – இரண்டு டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவைகேற்ப
கறிவேப்பில்லை – சிறிதளவு
செய்முறை:
ஒரு கப் சாமை அரிசி, மூன்று கப் தண்ணீர் ஊற்றி நான்கு விசில் வந்தவுடன் இறக்கி ஆறவிடவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.வெங்காயம்,பச்சை மிளகாய்,சிகப்பு குடைமிளகாய்,உப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கிய பிறகு,வேகவைத்த சாமை அரிசி,கறிவேப்பில்லை சேர்த்து கலந்து பரிமாறவும்.