April 14, 2018
தண்டோரா குழு
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் ஒரே நாளில் இந்திய வீரர்கள் 8 தங்கம் வென்றுள்ளனர்.
2018ம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது.இன்று ஒரே நாளில் மட்டும் இந்தியாவுக்கு 8 தங்கப்பதக்கங்கள் கிடைத்தன.
1. பெண்களுக்கான ‘லைட் பிளை வெயிட்'(41- 45 கி.கி.,) பிரிவு குத்துச்சண்டையில், மேரிகோம், வடக்கு அயர்லாந்தின் கிறிஸ்டினாவை வென்று தங்கம் வென்றார்.
2. ஆண்கள் பிளைவெயிட்(52 கி.கி.,) குத்துச்சண்டையில், இந்தியாவின் கவுரவ் சோலங்கி வடக்கு அயர்லாந்தின் இர்வினை வென்று தங்கம் வென்றார்.
3. ஆண்கள் மிடில் வெயிட்(75 கி.கி.,) பைனலில் விகாஷ் கிருஷ்ணன், காமரூனை சேர்ந்த வில்பிரட்டை வீழ்த்தி தங்கம் வென்றார்.
4. ஆண்களுக்கான 50 மீ., ரைபிள் 3 பொசிசன்ஸ் துப்பாக்கிச்சுடுதலில் அசத்திய இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புட் 454.5 புள்ளி பெற்று, காமன்வெல்த் சாதனையுடன் தங்கம் வென்றார்.
5. ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 86.47 மீ,., தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்றார்
6.மல்யுத்தம் பெண்கள் ‘பிரிஸ்டைல்'(50 கி.கி.,) போட்டியில், வினேஷ் போகத் தங்கப்பதக்கம் வென்றார்.
7. ஆண்கள் 125 கி.கி., பிரிஸ்டைல்(125 கி.கி.,) மல்யுத்த போட்டியில் இந்தியாவின் சுமித் மாலிக் தங்கத்தை தட்டி சென்றார்.
8. மகளிர் டேபிள் டென்னிசில் சிறப்பாக செயல்பட்ட மணிகா பத்ரா தங்கம் வென்றார்.
அதைபோல், பெண்கள் ‘பிரிஸ்டைல்'(62 கி.கி.,) போட்டியில், இந்தியாவின் சாக்ஷி மாலிக் வெண்கலம் வென்றார். மேலும், மகளிர் இரட்டையர் பிரிவு ஸ்குவாஸ் போட்டியில் அஸ்வினி பொன்னப்பா,இணை வெண்கல பதக்கம் வென்றது.
இதன் மூலம் பதக்க பட்டியலில், இந்தியா 25 தங்கம், 16 வெள்ளி 18 வெண்கலம் என 59 பதக்கங்களுடன் 3வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.