April 14, 2018
தண்டோரா குழு
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி டேர்டெவில்ஸ் மோதியது. இதில், டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 53; லீவிஸ் 48; இசான் கிசான் 44 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி துவக்கம் முதலே அதிரடியாக ஆடியது.
20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து டெல்லி அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் துவக்க வீரர் ஜேசன் ராய் அதிரடியாக விளையாடி 94 ரன்கள் எடுத்தார்.
இப்போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி ஹாட்ரிக் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.