April 16, 2018
தண்டோரா குழு
பஞ்சாபிற்கு எதிரான போட்டியின் போது முதுகுவலி படாதபாடு படுத்தியது என சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்க்ஸ் அணியும் அஸ்வின் தலைமையிலான கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் நேற்று மோதியது. இதில் கிறிஸ் கெயிலின் அதிரடியால் பஞ்சாப் அணி 197 ரன்கள் குவித்தன. பின்னர் விளையாடி சென்னை அணி போராடி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம், 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. போட்டியின் நடுவே தோனிக்கு முதுகு வலி ஏற்பட்டது. இருந்தும் ஐந்து சிக்சர், ஆறு பவுண்டரி என தோனி தொடர்ந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்த காயம் குறித்து தோனி கூறுகையில்,
‘முதுகுவலி படாதபாடு படுத்தியது. இருந்தாலும் கடவுள் தான் அதை தாங்கிக்கொள்ளும் சக்தியை எனக்கு கொடுத்தார். என் கையால் பேட்டிங் செய்யும் போது, முதுகுப்பகுதியை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. இது பயப்படும் அளவு மிகப்பெரிய காயம் இல்லை என்பது எனக்கு தெரியும். ஆனால், அதன் ஆளத்தை உணராவிட்டால், பின் விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும்.’ என்றார்.