April 17, 2018
tamilsamayam.com
காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள், தாயகம் திரும்பினர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21வது காமன்வெல்த் போட்டிகள் நடந்தது. இதில் அசத்திய இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலங்கம் என பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தது.
இதையடுத்து இந்திய வீரர்கள் தற்போது தாயகம் திரும்பிவருகின்றனர். சுஷில் குமார், மேரி கோம், மனிகா மத்ரா, சுமித் மாலிக் ஆகியோர் அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர்.
இந்தியா வந்த அவர்களுக்கு,ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
மல்யுத்த வீரர் சுஷில் குமார் கூறுகையில்,”காமன்வெல்த் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டேன் என நம்புகிறேன்.இந்தியர்களின் ஆசீர்வாதங்கள் தான் என்னை இந்த அளவுக்கு செயல்படவைத்தது”. என்றார்.