April 19, 2018
தண்டோரா குழு
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடித்துள்ள மெர்குரி படம் நாளை வெளியாகிறது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினா் கடந்த 50 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். இதனால் தமிழகத்தில் எந்த படமும் வெளிவரவில்லை.அரசின் தலையீட்டால் இந்த பிரச்னை முடிவுக்கு வந்து நாளை முதல் படங்கள் வெளியாகவுள்ளன.
வேலை நிறுத்தத்திற்கு பின் வெளியாகும் முதல் திரைப்படமாக பிரபு தேவா நடித்த “மெர்குரி” படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.மெர்குரி படம் தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் ஏற்கனவே ரிலீஸாகிவிட்டது.படம் வெளியான உடனேயே பைரஸியும் வந்துவிட்டதால் மெர்க்குரி படம் கடும் பாதிப்பிற்கு உள்ளாகிவிடும் என்பதால் இதனை தடுக்கும் பொருட்டு மெர்குரி படம் நாளை வெளியாகவுள்ளது.