April 19, 2018
தண்டோரா குழு
பாகுபலி என்னும் பிரம்மாண்ட படத்தை இயக்கி இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் பிரபலமானவர் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி.இரண்டு பாகங்களும் சேர்த்து கிட்டத்தட்ட 400 கோடியில் தயாரிக்கப்பட்ட பாகுபலி படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இதனைத்தொடர்ந்து ராஜமெளலியின் அடுத்த படத்திற்கு மாபெரும் எதிர்பார்ப்பு நிலவியது. சமீபத்தில் அவர் அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார்.ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தில்,ஜூனியர் என்.டி.ஆர்.-ராம் சரண் தேஜா இருவரும் ஹீரோக்களாக நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை, டி.வி.வி.தனய்யா தயாரிக்கிறார்.இந்தப் படம்,300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.ராம் சரண் தேஜா,போயபட்டி ஸ்ரீனு இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார்.ஜூனியர் என்.டி.ஆர்., திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.இந்த இரு படங்களின் ஷூட்டிங் முடிந்த பிறகு,இந்த வருடக் கடைசியில் எஸ்.எஸ்.ராஜமெளலி படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.