April 20, 2018
தண்டோரா குழு
மலையாள நடிகையான நஸ்ரியா நசீம் நேரம் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே பெரிய வரவேற்பு கிடைக்க “ராஜா ராணி”,”நையாண்டி”,”வாயை மூடி பேசவும்”, “திருமணம் எனும் நிக்காஹ்” போன்ற படங்களில் நடித்தார்.
பின்னர்,”பெங்களூர் டேஸ்”படத்துக்குப் பிறகு நடிகர் ஃபகத் பாசிலைத் திருமணம் செய்த அவர் தற்போது சினிமாவிலிருந்து விலகியிருக்கிறார்.தற்போது,நஸ்ரியா அஞ்சலி மேனன் இயக்கும் அடுத்த படத்தின் மூலம் மீண்டும் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில்,தற்போது நஸ்ரியா வீட்டிலிருந்து சினிமாவுக்கு அவரது தம்பி நவீன் நசீம் அறிமுகமாவிருகிறார்.கப்பி படத்தை இயக்கிய ஜான்பால் ஜார்ஜ் இயக்கும் “அம்பிலி” படத்தில் தான் நடிக்க இருக்கிறார் நவீன்.சௌபின் சாஹிர் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிராறாம் நவீன்.